பாலிவுட் திரைத்துறையில் தான் விவாகரத்து எல்லாம் சாதாரண விஷயம் என்றால், இப்போது இந்தி சீரியல்களில் நடிக்கும் நடிகைகளும் விவகாரத்து என்ற விஷயத்தை ஈஸியாக கையாள ஆரம்பித்துவிட்டனர். பாலிவுட் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சிம்ரன் கன்னா. இவர் பரத் தூதானி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் வினீத் என்கிற மகனும் இருக்கிறார். சமீப காலமாக கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, சிம்ரன் கன்னா கணவரை தனியாக பிரிந்து வசித்து வந்தார். இந்நிலையில் கணவர் பரத்தும், தானும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றதாக சிம்ரன் கன்னா அறிவித்துள்ளார். மேலும் மகன் வினீத் கன்னா, கணவருடன் தற்போது வசித்து வருவதாகவும், எப்போது வேண்டுமானாலும் அவரை நான் பார்க்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சிம்ரன் கன்னன் குறிப்பிட்டுள்ளார். 


விவகாரத்து பெற்றது குறித்து மனம் திறந்துள்ள சிம்ரன் கன்னா,  கணவருக்கும் தனக்கும் ஒரு சில விஷயங்களில் கருத்துகள் ஒத்து போகாததால், அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று விட்டதாகவும், பெரிதாக எந்த பிரச்னையும் இல்லை என்ற தெரிவித்துள்ளார். மேலும் பரத் மீது எந்த கோபமும் இல்லை, இருவரும் மனம் ஒத்தே பிரிய முடிவெடுத்தோம் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதையும் படிங்க: மாமியாருடன் நயன்தாரா எடுத்த கூல் செல்ஃபி... வைரலாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் அடக்க ஒடுக்கமான

சிம்ரன் கன்னாவின் மூத்த சகோதாரியான சாஹத் கன்னாவும் 2018ம் ஆண்டு அவருடைய கணவர் ஃப்ர்ஹான் மிர்சாவிடம் இருந்து விவாகரத்து பெற்றவர் ஆவர். கணவர் தன்னை துன்புறுத்துவதாக கூறி விவகாரத்து பெற்ற சாஹத் கன்னா, தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். அக்கா, தங்கைகள் இருவரும் அடுத்தடுத்து விவகாரத்து பெற்றது பாலிவுட் சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.