Bollywood heroine in Sangamitra

மிகப் பெரிய பொருள்செலவில் உருவாக இருக்கும் சங்கமித்ரா படத்தில் பாலிவுட்டின் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவரான திஷா பதானி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

சுந்தர்.சி இயக்கத்தில் ஜெயம்ரவி, ஆர்யா உள்ளிட்ட பலர் நடிக்க உள்ள படம் சங்கமித்ரா. மிகப் பெரிய பொருள்செலவில் உருவாக இருக்கும் இப்படத்தை மெர்சல் படத்தைத் தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான இசையமைக்கிறார்.

இந்தப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகி இருந்தார். பின்னர். சில கருத்து வேறுபாடு காரணமாக, படத்திலிருந்து வெளியேறினார்.

தற்போது இந்தப் படத்தில் சங்கமித்ராவாக நடிக்க பாலிவுட் நடிகையான திஷா பதானி ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்தத் தகவலைத் தேனாண்டாள் பிலிம்ஸின் தலைமை செயல் அதிகாரி ஹேமா ருக்மணி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கையை மையமாக கொண்டு வெளியான எம்.எஸ்.தோனி படத்தில் நடிகை திஷா பதானி ஏற்கனவே கதாநாயகியாக நடித்தவர் என்பது கொசுறு தகவல்.