பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் நடிகர் விஜய் நடித்த இரண்டு படங்களை மீண்டும் ரீமேக் செய்ய விரும்புவதாக தகவல் தெரிவித்துள்ளார், இது விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  பல்வேறு சர்ச்சைகளை தாண்டி விஜய் நடித்த பிகில் திரைப்படம் தீபாவளி முன்னிட்டு உலகம் முழுவதும்  இன்று திரைக்கு வந்துள்ளது. இதனால் இன்று அதிகாலைமுதலே ரசிகர்கள் திரையரங்குகளில் திரண்டு பிகில் படத்தை பட்டாசு வெடித்து மேலதாளங்கள் முழங்கி  உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் சல்மான்கானின் அறிவிப்பு அவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  "நம்ம  தளபதியின் நடிப்பும் ஸ்டைலும் பாலிவுட்  கதாநாயகர்களை  அசர வைத்துள்ளது,  நம்ம தளபதி தளபதிதான்"  என்று விஜய் ரசிகர்கள்  உற்சாகமாக பேசிவருகின்றனர்.  அதாவது சல்மான்கான் நடிப்பில் தற்போது தபாங் 3 திரைப்படம் உருவாகிவருகிறது,  பிரபுதேவா அந்த படத்தை இயக்கி வருகிறார்.  அந்தப் படம் இந்தியில் மட்டுமல்லாது தமிழிலும் டப்பிங் செய்யப்படுகிறது. இந்நிலையில்  கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் டிரைலர் வெளியானது. அதனையடுத்து பத்திரிக்கையாளர்களை  சந்தித்தார் சல்மான்கான், அப்போது அவரிடம் விஜய் நடித்த போக்கிரி படத்தின் ரீமேக்கில்நடித்துஉள்ளீர்கள்.

 

தற்போது விஜய்யின்  மற்ற எந்த படத்தை ரீமேக் செய்தால் நீங்கள் நடிப்பீர்கள் என கேட்டதற்கு, விஜய்யின் படங்கள் எனக்ள் என்றேலே இனக்கு மிகவும் பிடிக்கும் என்ற அவர்,  அவரின் திருப்பாச்சி மற்றும் தெறி உள்ளிட்ட திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன் அந்தப் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.  அவரின் இந்த கருத்தால் விஜய் ரசிகர்கள் தற்போது அந்தரத்தில் பறக்கின்றனர்