தமிழ் ரசிகர்கள் மனதில் ராணியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் நயன்தாரா. தனது அசத்தல் நடிப்பால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்திற்கு சொந்தக்காரியாக வலம் வருகிறார். டாப் ஹீரோக்களின் படம் என்றாலே பர்ஸ்ட் சாய்ஸ் நயன் தான் என்கிற அளவிற்கு முன்னணி ஹீரோக்களும் கால்ஷீட் கேட்டு காத்திருக்கின்றனர். படத்தில் ஹீரோவை உருகி, உருகி காதலிக்கும் ஹீரோயின் கதாபாத்திரங்களை  எல்லாம் விட்டுவிட்டு, கதையின் நாயகியாக வலம் வரக்கூடிய படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். 

பெரும்பாலும் விளம்பர படங்களில் தலைகாட்டாமல் இருந்த நயன்தாரா, கேத்ரினா கைப்பின் கே பியூட்டி விளம்பரத்தில் நடித்தது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது. முற்றிலும் வித்தியாசமான கெட்டப்புகளில் நயன்தாரா இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வைரலானது. அப்போது நயனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கேத்ரினா கைப் தனது இன்ஸ்டாகிராமில், நயன்தாராவுக்கு நன்றி கூறும் விதத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கத்ரினா "அழகான தென்னிந்திய சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு பெரிய நன்றி. அவரது பிஸியான நேரத்திற்கு நடுவே மும்பைக்கு வந்து கே பியூட்டி விளம்பரத்தில் நடித்ததற்கு நன்றி. தாராள எண்ணத்துடனும், கருணையுடனும் இருப்பவர் அவர். எப்போதும் நன்றி மறக்கமாட்டேன்" என கூறியிருந்தார். 

இதையும் படிங்க: “இதுக்கு புடவையே கட்டியிருக்க வேண்டாம்”...சாக்‌ஷி அகர்வாலின் அதிரடி கவர்ச்சியை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள்!

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கேத்ரினா கைப்பிடம் நயன்தாரா எப்படிப்பட்டவர் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “நயன்தாரா அழகானவர் மட்டுமல்ல வலிமையானவர் என்பதை நான் பார்த்தேன். அவர் ஒரு போராளியாக வளர்ந்திருக்கிறார். அவரிடம் ஏதோ ஒன்று இருக்கிறது. சிறுவயதில் இருந்தே பணியாற்றுவதால், கவனத்துடன் செயல்படுகிறார். என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரிகிறது. 

இதையும் படிங்க: கடல் கன்னியாக மாறிய ஸ்ரேயா... குட்டை உடையில் தண்ணீரில் மிதந்த படி கவர்ச்சியில் தாராளம்...!

அவரை பார்க்கும் போது நயன்தாரா என்னை பிரதிபலிப்பது போல் உணர்ந்தேன். அதனால் தான் என்னுடன் செட்டில் இருப்பவர்களுடன் கூறுவேன் என்னை கண்ணாடியில் பார்ப்பது போல் இருக்கிறது” என்று நயன்தாரா புகழ்ந்து தள்ளியுள்ளார்.