Bollywood actresses photo goes viral

ஐஸ்வர்யா ராய் பச்சன் சமீப காலமாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை என்றாலும், அவர் மீது மீடியாவின் வெளிச்சம் எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவர் மகள் ஆராத்யா இடம் பெறும் புகைப்படங்கள், அடிக்கடி இணையத்தில் வைரலாகுவது சகஜம்.

சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவின் போது வெளியாகிய ஐஸ்வர்யா ராய்-ன் தோற்றம் , அவரது 44 வயதிலும் கூட பல இளம் நடிகைகளுக்கு சவால் விடுவதாக இருக்கிறது. சென்ற ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்-ன் உடை மற்றும் மேக்கப் கேலிக்கு உள்ளாகியிருந்தாலும், இந்த ஆண்டு அவரின் உடை மற்றும் தோற்றம் கேலி செய்தவர்களை எல்லாம் பொறாமைப்படும் படி ஆக்கிவிட்டது.

கேன்ஸ் திரைப்படவிழாவின் போது ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவுடன் கலந்துகொள்வது வழக்கம். இந்த முறையும் அவ்வாறே அவர் கலந்து கொண்டார். இந்த விழாவின் போது அவரும் ஆராத்யாவும் எடுத்துக்கொண்ட ஒரு லிப் டு லிப் கிஸ் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இந்த புகைப்படம் அம்மா-மகள் பாசத்தை காட்டுவதாக இருக்கிறது.