பிரபல பாலிவுட் முன்னாள் நடிகை பூஜா பேடி, முதல் கணவரை விவாகரத்து செய்த நிலையில் தற்போது இரண்டாவது திருமணத்திற்கு தயாராகியுள்ளார். இவருக்கு குடும்பத்தினர் முன்னிலையில் காதலர் தினம் அன்று திருமண நிச்சயதார்த்தமும் முடிவடைந்துள்ளது. 

பிரபல பாலிவுட் முன்னாள் நடிகை பூஜா பேடி, முதல் கணவரை விவாகரத்து செய்த நிலையில் தற்போது இரண்டாவது திருமணத்திற்கு தயாராகியுள்ளார். இவருக்கு குடும்பத்தினர் முன்னிலையில் காதலர் தினம் அன்று திருமண நிச்சயதார்த்தமும் முடிவடைந்துள்ளது.

முன்னாள் இந்தி நடிகை பூஜா பேடிக்கும், அவருடைய பள்ளி நண்பர் மானிக் காண்ட்ராக்டர் (Maneck Contractor ) என்பவருக்கும் காதலர் தினத்தன்று எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் முடிவடைந்துள்ளது. 

பூஜா பேடிக்கு 20 வயதில் மகளும், 19 வயதில் ஒரு மகனும் உள்ளனர். மகள் அலீனா தற்போது சில படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். மகன் கல்லூரியில் படித்து வருகிறான். எனவே இவர்களுக்கு ஏற்ற போல் தங்களுடைய திருமண நாளை விரைவில் அறிவிக்க உள்ளதாக கூறியுள்ளார் பூஜா.

View post on Instagram

இந்த திருமணம் குறித்து கூறியுள்ள பூஜா... முதல் கணவர் Farhan Furniturewalla வை கடந்த 2003 ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று விவாகரத்து செய்ததாகவும், தற்போது அதே நாளும் தன்னுடைய இரண்டாவது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளார். 

மேலும் தற்போது தான் திருமணம் செய்து கொள்ள உள்ள Maneck மிகவும் வித்தியாசமானவர், தன்னுடைய குழந்தைகளை அவருடைய குழந்தைகளாகவே நினைத்து, அன்பு காட்டுகிறார். அவர் தன்னுடன் பள்ளியில் மூன்று ஆண்டு சீனியர் என்றும் கூறியுள்ளார்.

Scroll to load tweet…

பூஜா பேடி, பிரபல நடிகர், கபீர் பெட்டியின் மகள், இவருடைய அம்மாவும் தலைசிறந்த பரதநாட்டிய கலைஞர், பெற்றோரின் வழியே பூஜா பேடியும் நடிகையானார். சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருக்கிறார். மேலும் தற்போது இவருடைய மகளும் நடிகையாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.