அட்லீ இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் அக்டோபர் மாதம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது. 

பெண்கள், கால் பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், மேயாத மான் சிந்துஜா, கதிர், யோகி பாபு, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், விஜய் 'வெறித்தனம்' என்கிற பாடலை, முதல் முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாட உள்ளார்.

சமீபத்தில் வெளியான சிங்க பெண்ணே பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்த்து பி.வி.கம்பைன்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக, த்ரிஷா அல்லது ராஷ்மிக்கா நடிக்கலாம் என ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது படக்குழுவினர் இந்த படத்தில் 'கபீர் சிங்', 'மெஷின்' , 'தோனி'  உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.