என் மகள் யாரையாவது காதலிப்பதாக கூறினார் என்னுடைய கணவர் அவளை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளி விடுவார் என நடிகை கஜோல் தெரிவித்திருப்பது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .  தமிழில் மின்சார கனவு திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்  நடிகை கஜோல் பாலிவுட்டில் மிகப்பிரபலமான நடிகையாக வலம் வருகிறார் இவர்,   இவரும் பாலிவுட்டின் பிரபல ஹீரோக்களில் ஒருவருமான அஜய் தேவ்கன்னும்  கடந்த 1999ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

தற்போது இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் இருந்து வருகின்றனர்  இவர்களுக்கு நைசா என்ற 20 வயது மகளும் யூத் என்ற மகனும் உள்ளனர்.   பெரும்பாலும் ஊடகங்களில் பேட்டி கொடுப்பதை தவிர்த்து வந்த கஜோல் நீண்ட நாட்களுக்கு பின்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்தார் அதில் எனது குடும்பம் மிகவும் மகிழ்ச்சியான சிறிய குடும்பம் ,  என் குழந்தைகள் தான் எனது உலகம்  நான் எனது குழந்தைகளை  அதிகம் கண்டிப்பதில்லை என் குழந்தைகள் எனது கணவருக்கு பயப்படுவர், காரணம் அவர் அப்படியே எனக்கு நேர் எதிர் பிள்ளைகளிடம் மிகவும் கண்டிப்பாக நடந்து கொள்வார் .

அதாவது என் மகள் யாரையாவது காதலிப்பதாக கூறினால் கூட அவளை துப்பாக்கி எடுத்து சுட்டுத் தள்ளி விடுவார் .  அந்த அளவிற்கு கண்டிப்பு அதனால் என் மகளும் மகனும் ஏதாவது செய்தால் என்னிடம் நிச்சயம் கூறிவிடுவர் என தெரிவித்துள்ளார் . அவரின் இந்த பேட்டி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது காதலித்து திருமணம் செய்துகொண்ட தம்பதியரே இப்படி காதலுக்கு எதிராக பேசலாமா என விமர்சித்து வருகின்றனர்.