Asianet News TamilAsianet News Tamil

ஷாருக்கான் - நயன்தாரா படத்தில் இணைந்த மற்றொரு முன்னணி நடிகை..!! அட இவங்களா..?

அட்லீ இயக்கத்தில் நயன்தாரா மற்றும் ஷாருகான் நடிக்க உள்ள, படத்தில்.. மற்றொரு முன்னணி நடிகை தற்போது கமிட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

bollywood actress join in second heroine for sharukhan movie
Author
Chennai, First Published Aug 18, 2021, 9:04 AM IST

அட்லீ இயக்கத்தில் நயன்தாரா மற்றும் ஷாருகான் நடிக்க உள்ள, படத்தில்.. மற்றொரு முன்னணி நடிகை தற்போது கமிட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர்களில் ஒருவர் அட்லீ. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனரான இவர் 'ராஜா ராணி'  படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்திற்கு அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில், என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். என்ன தான் அட்லீ மற்ற படங்களைப் பார்த்து காப்பி அடிக்கிறார் என்று குற்றச்சாட்டுக்கள் இருந்து வந்தாலும் இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. 

bollywood actress join in second heroine for sharukhan movie

இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக பாலிவுட் சினிமா கால் பாதிக்க ஆயத்தமானார் அட்லீ. அந்த வகையில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் உறுதி செய்யப்பட்டது. தற்போது ஷாருகான் நடித்து வரும் படங்களை முடிந்த பின், அட்லீ இயக்கத்தில் இந்த வருடமே நடிக்க துவங்குவார் என்றும், இந்த படத்தின் டெஸ்ட் ஷூட்டிங் கூட முடிந்து விட்டதாக கூறப்பட்டது.

bollywood actress join in second heroine for sharukhan movie

மேலும் இந்த படத்தில் ஷாருகான் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாகவும், ஒரு ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ள நிலையில், மற்றொரு ஷாருக்கானுக்கு ஜோடியாக தற்போது 'தங்கல்' படத்தில் அமீர் கானுக்கு இரண்டாவது மகளாக நடித்திருந்த, சானியா மல்கோத்ராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. நடிகை நயன்தாராவிற்கு, முதல் பாலிவுட் திரைப்படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

bollywood actress join in second heroine for sharukhan movie

மேலும் இந்த படத்தின் டீசர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், வெளியாமல் போனது. மேலும் தற்போதைக்கு இந்த படத்தின் நாயகி நயன்தாரா என்பதும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் என்பது மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் இந்த படம் குறித்த அடுத்தடுத்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios