Bollywood actress caged herself for this reason

பாலிவுட் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் பொதுவாகவே பரபரப்புக்கு பெயர் போனவர். இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவின் போது ,இவர் செய்திருக்கும் காரியம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வழக்கமான காரணங்களாக இல்லாமல், இந்த முறை இவர் தன்னை ஒரு கூண்டுக்குள் அடைத்துக்கொண்டது தான், இந்த கேன்ஸ் விழாவில் மல்லிகா ஷெராவத் செய்த காரியம்.

தான் இவ்வாறு தன்னை கூண்டுக்குள் அடைத்துக் கொண்டது, அதிகரித்து வரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன் கொடுமைகள் குறித்த, விழிப்புணர்வை ஏற்படுத்த தான் என மல்லிகா ஷெராவத் தெரிவித்திருக்கிறார்.

கேன்ஸ் விழாவின் போது இது போன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினால், அது மக்களை சென்றடையும் எனவே தான் இவ்வாறு செய்தேன் என தெரிவித்திருக்கிறார் மல்லிகா ஷெராவத். மல்லிகாவின் இந்த செயலால் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.