பிரபல நடிகர் கவலைக்கிடம்...! பிரார்த்திக்க வேண்டுகோள் விடுத்த ஸ்டார் மனைவி..!

பிரபல பாலிவுட் நடிகரான திலீப் குமார், தற்போது மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

1940 ஆம் ஆண்டுகளில், பாலிவுட்டில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் திலீப் குமார். இவருக்கு தற்போது வயது 95.

இவருக்கு சென்ற ஆண்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்ட  பின்னர் ஓரளவிற்கு உடல் நலம் தேறிய பின்னர், வீடு  திரும்பினார். இந்நிலையில் மீண்டும் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு  உள்ளது. இந்நிலையில், அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனை தொடர்ந்து அவரது மனைவியும், புகழ் பெரும் நடிகையான  சாய்ராபானு. தன்னுடைய இணையதள பக்கத்தில் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார். அதில் திலீப் குமார் உடல் நிலை   குணம் அடைய பிரார்த்தனை செய்யுங்கள் என கேட்டுக்கொண்டு உள்ளார்

திலீப் குமாரின் ரசிகர்கள், அவருக்காக வேண்டிக்கொள்வதாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.