bollywood actor arman koli attack her lover

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல பாலிவுட் நடிகர் அர்மான் கோலிக்கு அவருடைய காதலி நீறு ரந்தாவாவிற்கும் பண பிரச்சனை காரணமாக சண்டை வெடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நடிகர் அர்மான், காதலியை சரமாரியாக தாக்கி விட்டு தலைமறைவானார். தற்போது இவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் 46 வயதான அர்மான், நீறு ரந்தாவா என்கிற 35 வயதாகும் மாடலை காதலித்து வந்துள்ளார்.

இதனால் இருவரும் சான்டகிருஸ் என்கிற பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து மூன்று ஆண்டுகளாக லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். 

இந்நிலையில் ஜூன் 3ம் தேதி பணம் தொடர்பாக இருவருக்கு இடையிலும் சண்டை வெடித்துள்ளது. அப்போது காதலியை கீழே பிடித்து தள்ளிய அர்மான் கோலி. பின் அவரின் தலைமுடியை பிடித்து பலமாக தரையில் அடித்துள்ளார். இதனால் இவருடைய மண்டை உடைத்து ரத்தம் கொட்டியுள்ளது. மேலும் கீழே தள்ளியதில் அவரின் முட்டியிலும் காயம் ஏற்பட்டுள்ளது. பின் அர்மான் அந்த இடத்தில் இருந்து தப்பினார்.

நீறுவை அவரின் கார் டிரைவர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் பற்றியும் நீறு போலீசில் நிலையத்தில் புகார் அளித்தார். இவரின் புகாரின் அடிப்படையில் நடிகர் அர்மான் கோலியை போலீசார் தேடி வந்தனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார்.

நேற்று அவர் புதிய சிம் கார்டு வாங்க வெளியில் வந்தபோது, அப்போது அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் தன் நண்பரின் பண்ணை வீட்டில் மறைந்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.