bojpuri actress succide

கடந்த வாரம் மும்பையை சேர்ந்த பிரபல நடிகையும் மாடலுமான கிருத்திகா சவுத்ரி, அவர் வீட்டிலேயே கொலை செய்யப்பட்டு பிணமாக கண்டு பிடிக்கப்பட்டார்.

இந்த, சம்பவம் அரங்கேறி ஒரு வாரம் கூட முழுமையாக ஆகாத நிலையில் மீண்டும் திரையுலகத்தை அதிர்ச்சியாக வகையில் ஒரு தற்கொலை நடந்துள்ளது.

போஜ்பூரி மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை அஞ்சலி ஸ்ரீவாசுதேவ், தற்போது இவருக்கு வயது 29 , பல போஜ்புரி முன்னணி நடிகர்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியவர்.

தற்போது ஒரு திரையுலக நண்பருடன் லிவிங் டூ கெதரில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் சில நாட்களுக்கு முன் இவருடன் சண்டை போட்டுகொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்த சோகத்தில் நடிகை அஞ்சலி தூக்கு மாட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் அஞ்சலியின் தாயார் தன்னுடைய மகள் தற்கொலையில் ஒரு சில சூழ்ச்சிகள் உள்ளது என கூறியுள்ளார். ஏற்கனவே முதல் கட்ட விசாரணையில் தற்கொலை என உறுதிசெய்துள்ள போலீசார். என்ன காரணத்திற்காக தற்கொலை செய்துகொண்டார் அஞ்சலி என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.