வட இந்தியாவில் மிகவும் பிரபலமானவர் நடிகர் பவன் சிங். இவர் அதிகமாக போஜ்புரி படங்களில் தான் நடித்துள்ளார். தற்போது இவர் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இவருக்கு ஜோடியாக அக்ஷாரா சிங் என்பவர் ஜோடியாக நடித்து வருகிறார். 

இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக ஒரு சில கிசுகிசுவில் சிக்கி வந்ததனர். இந்நிலையில் படத்தின் ஷூட்டிங்கிற்கு ஒன்றாக சென்ற இவர்கள், போகும் வழியில் சில்வாசா என்ற இடத்தில் ரூம் எடுத்து தங்கியுள்ளனர்.

மேலும் இருவம் ரூமில் மது அருதியுள்ளனர். பின் போதையுடனே... பவன் சிங், வெளியே செல்ல முயன்றுள்ளார். இவர் போதையில் நிற்க கூட முடியாத நிலையில் தள்ளாடியபடி இருந்ததால் அக்ஷரா இவரை காரை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.

அக்ஷராவை தள்ளி விட்டு விட்டு வெளியே செல்ல மீண்டும் முயற்சி செய்த இவரை மீண்டும் மீண்டும் அக்ஷரா தடுத்து நிறுத்தியதால் கடுப்பாகி கோவத்தில், அக்ஷாரவின் தலைமுடியை பிடித்து இழுத்து அடித்து சுவற்றில் இடித்து துன்புரிதியுள்ளார். 

ஒரு நிலையில் வலி தாங்க முடியாமல், அக்ஷார கத்தியுள்ளார். உடனே அந்த ஓட்டலில் உள்ள அனைவரும் அங்கு கூடி விட்டனர். இவைகள் சண்டை போட்டதை சிலர் வீடியோ எடுக்க துவங்கியதை சுதாரித்துக்கொண்டு அக்ஷாரா கதவை சாத்திக்கொண்டார்.