bobby simhaa acting vikram villein

'காதலில் சொதப்புவது எப்படி' திரைப்படத்தின் மூலம் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகம் கொடுத்த பாபி சிம்ஹா இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.

மேலும் இவர் வில்லங்க நடித்த 'ஜிகிர்தண்டா' படத்திற்கு, தேசிய விருது வாங்கினார். இதை தொடர்ந்து இவர் சிங்கிள் ஹீரோவாக 'கோ', 'மெட்ரோ', 'பாம்பு சட்டை' ஆகிய படங்களில் நடித்தார். 

தற்போது மீண்டும் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ள 'சாமி 2 ' திரைப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2003 ஆம் ஆண்டு விக்ரம் மற்றும் திரிஷா நடித்து பிரமாண்டமாக வெற்றி பெற்ற திரைப்படம் சாமி. முதல் பாகத்தில் வில்லனாக கோட்டா சீனிவாச ராவ் நடித்திருந்தார் இவருடைய நடிப்பு இந்த படத்தில் அதிக அளவில் பேசப்பட்டது.

முதல் பாகத்தில் சாயல் இல்லாமல் எடுக்கப்படும் 'சாமி 2 ' படத்தில் இளம் வில்லனை தேடி வந்த இயக்குனர் ஹரி, பாபி சிம்ஹாவிடம் இது குறித்து பேசியதாகவும். ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரமாக வில்லன் கதாபாத்திரத்தை சித்தரித்துள்ளதால் பாபி சிம்ஹா ஒத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.