கடந்த 1996ஆம் ஆண்டு, கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான 'இந்தியன்' படம் சூப்பர் டூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை, தொடர்ந்து 23 ஆண்டுகளுக்குப் பின், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க முடிவு செய்துள்ளார் இயக்குனர் சங்கர்.

இந்த படத்திலும் நடிகர் கமலஹாசனே கதாநாயகனாக நடிக்க உள்ளார். அந்த வகையில் ஏற்கனவே,  இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்ட நிலையில்,  ஒரு சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் இந்த மாதம் முதல், மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என அறிவித்திருந்தனர் படக்குழுவினர்.  இந்நிலையில் இந்த படத்தில் காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், உள்ளிட்ட பலர் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் நடிகை பிரியா பவானியும்,  இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.  இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது லைகா நிறுவனம்.  இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னையில் தொடங்க விருப்பதாகவும் முதல் ஷெட்யூலில் சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி,  இந்த படத்தில் ஜிகர்தண்டா படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹா இணைந்து இருப்பதாகவும்,  அவர் வில்லனாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.