ஆன் லைன் திரை விமர்சனம் என்றாலே சினிமா ரசிகர்களுக்கு முதலில் நினைவில் வருவது புளூ சட்டை மாறன்தான். புதிதாக வெளிவரும் திரைப்படங்கள் இவரது விமர்சனத்தில் சிக்கி சின்னா பின்னமாகும்.

இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு ரஜினிகாந்த் நடித்த பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளியிடப்பட்டன. இரண்டு திரைப்படங்களுமே அவர்களது ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் இருந்ததால் பெரு வெற்றி பெற்று ஓடிக் கொண்டிருக்கின்றன.

தற்போது இந்த இரண்டு படங்களுக்கும் இடையே வசூல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புளூ சட்டை மாறன் இந்த இரண்டு படங்களுக்கும் விமர்சனம் வெளியிட்டிருந்தார்.

வழக்கம் போல் இந்த இரண்டு படங்களையும் புளூ சட்டை மாறன் செமையாக  கலாய்த்திருந்தார். ஆனாலும் விஸ்வாசம் அவரது விமர்சனத்தில் இருந்து ஓரளவு தப்பித்திருந்தது.

ஆனால் பேட்ட பட விமர்சனம் அப்படி இல்லை… புளூ சட்டை மாறன் பேட்ட படத்தை கடுமையாக விமர்சனம் செய்து வெளியிட்டிருந்தார். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் புளூ சட்டை மாறன் பேட்ட படத்தை விமர்சனம் செய்து வெளியிட்டிருந்த விமர்சனம் தற்போது யூ டியூபில் இருந்து தூக்கப்பட்டுள்ளது. இது ஆன் லைன் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.