Blue Sattai Maran : டுவிட்டர் வாயிலாக கொலை மிரட்டல் விடுத்த அஜித் ரசிகருக்கு விமர்சகரும், இயக்குனருமான ப்ளூ சட்டை மாறன் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருந்தாலும் சரி, அறிமுக ஹீரோவாக இருந்தாலும் சரி, அவர்களது படங்களை பாரபட்சம் பார்க்காமல் விமர்சித்து பாப்புலர் ஆனவர் ப்ளூ சட்டை மாறன். அண்மையில் இவர் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். இவர் இயக்கிய ஆன்டி இண்டியன் திரைப்படத்தை பாரதிராஜாவே வியந்து பாராட்டினார். இருப்பினும் ரசிகர்களிடையே இவரது படம் எடுபடவில்லை.
இதையடுத்து தனது விமர்சகர் வேலையை தொடர்ந்து செய்து வருகிறார். முன்னணி நடிகர்களை விமர்சிப்பதனால் இவருக்கு சம்பந்தப்பட்ட ரசிகர்களிடம் இருந்து அவ்வப்போது மிரட்டல்களும், எதிர்ப்புகளும் தொடர்ந்து வந்த வண்ணமே உள்ளன. இதையெல்லாம் பொருட்படுத்திக் கொள்ளாத அவர் தொடர்ந்து தனது வேலையை செய்து வருகிறார்.
இந்த ஆண்டு வெளியான அஜித்தின் வலிமை படத்தை கடுமையாக விமர்சித்து இருந்தார் ப்ளூ சட்டை, குறிப்பாக அஜித்தின் தோற்றத்தையும், அவர் பரோட்டா மாவு பிசைவது போல் ஸ்டெப் போடுவதாகவும் சாடி இருந்தார். இதனால் அவருக்கு கடுமையான எதிர்ப்பும் கிளம்பியது. சினிமா பிரபலங்களும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று டுவிட்டர் வாயிலாக கொலை மிரட்டல் விடுத்த அஜித் ரசிகருக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி கொடுத்துள்ளார். அதன்படி அஜித் ரசிகர் ஒருவர், “நீ யார என்ன வேணாலும் பண்ணீட்டு போ. தலய பத்தி தப்பா பேசுனா உடம்புல தல இருக்காது” என மிரட்டும் தொனியில் பதிவிட்டிருந்தார். இதற்கெல்லாம் அஞ்சாத ப்ளூ சட்டை மாறன், “ஓரமா போடா வெளக்கெண்ண” என தன் பாணியிலேயே பதிலடி கொடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள்... நல்லா இருக்குயா உங்க சமூக அக்கறை..! வெளியான வேகத்தில் ஜெயிலர் பட போஸ்டரை வெளுத்து வாங்கிய ப்ளூ சட்டை மாறன்
