ப்ளூ சட்டையை தாறுமாறாக கலாய்த்து கிழித்து தொங்கவிட்டு கதற வைத்து கலாய்த்த Butter சுரேஷ் எனும் துணை நடிகர். புலிக்குத்தி பாண்டி படத்தில் உங்கள் ஜட்டியை கழட்டி ஹீரோயின் மீது வீசி பெண்களை கொச்சைப்படுத்திய ‘வெண்ண’ சுரேஷ் அவர்களே என கேவலமாக விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். 

 ரசிகர்கள் கொண்டாடிய வலிமை :

ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற வலிமை திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டையை கிளப்பியது. வலிமை படத்தை அஜித்தின் முந்தைய படமான நேர்கொண்ட பார்வையை தயாரித்திருந்த போனி கபூர் தயாரிக்க அந்த படத்தின் இயக்குனர் எச்.வினோத் இயக்கி இருந்தார். அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளா இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மாஸ் பைக் கேங்கின் தலைவனாக பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா (Karthikeya) நடித்துள்ளார். 

மேலும் செய்திகளுக்கு... Aari : ப்ளூ சட்டை மாறனுக்கு வார்னிங் கொடுத்த பிக் பாஸ் வின்னர்...அஜித்திற்கு ஆதரவாக களத்தில் குதித்த ஆரி..!

பொரோட்டா மாவு பெசஞ்ச அஜித் - மாறனின் விமர்சனம் :

அஜித்தையும் விட்டு வைக்க மனமில்லாத ப்ளூ சட்டை 'வேற மாதிரி' பாடலுக்கு அஜித் நடனமாடும் புகைப்படத்தை வெளியிட்டு பரோட்டாவிற்கு மாவு பிசையும் இந்த காட்சியை பார்த்து தியேட்டரில் சிரிக்காதவர்கள் உண்டா என கேலி செய்திருந்தார். அதோடு விட்டாரா? படத்தை தயாரித்தவர தான் சேட் என்றால் அஜித் பஜன்லால் சேட் போல் இருப்பதாகவும், முகத்தில் தொப்பை போட்டுவிட்டதாகவும் மிக கடுமையாக விமரசித்து ரசிகர்களை கடும் கோபத்திற்கு ஆளாக்கிவிட்டார். இதனால் மாறனை கண்டமேனிக்கு ரசிகர்களை கழுவி ஊற்றி வருகின்றனர்.

 பிக்பாஸ் ஆரியை கலாய்த்த ப்ளூ சட்டை :

மாறனின் இந்த பதிவிற்கு கண்டனம் தெரிவித்த பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. படத்தை திருத்திக்கொள்ளும் கருத்துக்கள்சொல்லலாமே தவிர அந்தப் படத்தை காலி பண்ணு மாதிரி கமெண்ட் சொல்வது ரொம்ப தவறான ஒன்றும் என்றும் கூறி இருந்தனர். இந்த பதிவிற்கு பல கமெண்டுகள் வந்திருந்தன.அந்த கமெண்டுகளை பதில் அளிக்கும் விதமாக ட்வீட் செய்திருந்த மாறன்..ப்ளூ சட்டையை நார் நாரக துவைத்து, கிழித்து, அயர்ன் செய்து மடித்து கலாய்த்த டிவி நடிகர் ஆரி என்று குறிப்பிட்டதோடு. அஜித் போராட்டவுக்கு மாவு தான் பிசைந்தார் என்றும் கலாய்த்துள்ளார்.


மேலும் செய்திகளுக்கு... அஜித் பரோட்டா மாஸ்டர்..ப்ளூ சட்டை மாறனின் ட்வீட்டால் ..கொந்தளிக்கும் ரசிகர்கள்..

Public reaction to TV Actor Aari's Parotta related speech. Thank you all.

I reiterate again... Dance of Naanga Vera Maari - Parottakku Maavu Pisaiyara maathiri dhaan irukku.

Ask your Favorite actor Mr. Arjun ACP to improve his dance skills. That is not my job...KID!! pic.twitter.com/1jwU0FOVLW

— Blue Sattai Maran (@tamiltalkies) March 14, 2022

ஜட்டியை கழட்டி வீசிய வெண்ணை சுரேஷ் :

அதேபோல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் வலிமைக்கு எதிராக விமர்சனம் செய்திருந்த மாறனுக்கு கண்டனம் தெரிவித்தார். இதற்கு பதில் கொடுத்த மாறன்... ப்ளூ சட்டையை தாறுமாறாக கலாய்த்து கிழித்து தொங்கவிட்டு கதற வைத்து கலாய்த்த Butter சுரேஷ் எனும் துணை நடிகர். புலிக்குத்தி பாண்டி படத்தில் உங்கள் ஜட்டியை கழட்டி ஹீரோயின் மீது வீசி பெண்களை கொச்சைப்படுத்திய ‘வெண்ண’ சுரேஷ் அவர்களே.இதுபோன்ற கேவலமான சீன்களில் நடிக்காமல் நாகரீகம் காக்க வேண்டும். மற்றவர்களின் அருகதை பற்றி பேச உங்களுக்கு அருகதை இல்லை – வெண்ணை ரமேஷ், மதுரை மாவட்டம் என்று மிகவும் கடுமையாக விமர்சனங்களை தூவி உள்ளார்.

புலிக்குத்தி பாண்டி படத்தில் உங்கள் ஜட்டியை கழட்டி ஹீரோயின் மீது வீசி பெண்களை கொச்சைப்படுத்திய 'வெண்ண' சுரேஷ் அவர்களே.

இதுபோன்ற கேவலமான சீன்களில் நடிக்காமல் நாகரீகம் காக்க வேண்டும்.

மற்றவர்களின் அருகதை பற்றி பேச உங்களுக்கு அருகதை இல்லை - வெண்ணை ரமேஷ், மதுரை மாவட்டம்.

— Blue Sattai Maran (@tamiltalkies) March 14, 2022