மதம் சார்ந்த சமகால பிரச்னைகளையும், அரசியலையும்  மையப்படுத்தி அழுத்தமாகவும், நையாண்டி பாணியிலும்  எடுக்கப்பட்டுள்ள ஆன்டி இண்டியன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

பிரபல இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றும் பாராமல் கடுமையாக விமர்சிப்பவர் ப்ளூ சட்டை மாறன் என்கிற சி. இளமாறன். 'பல படங்களை வாய்க்கு வந்தபடி விமர்சிக்கிறாயே? தில் இருந்தால் நீ ஒரு படம் எடுத்துக்காட்டு. நாங்கள் அதை விமர்சிக்கிறோம்' என்று திரைத்துறை பிரபலங்களும், முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் அவ்வப்போது சவால் விட்டு வந்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக 'ஆன்டி இண்டியன்' எனும் படத்தை இயக்கியுள்ளார் ப்ளூ சட்டை மாறன். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இசையமைத்து இயக்கியுள்ளார் ப்ளூ சட்டை மாறன். மதம் சார்ந்த சமகால பிரச்னைகளையும், அரசியலையும் மையப்படுத்தி அழுத்தமாகவும், நையாண்டி பாணியிலும் எடுக்கப்பட்டுள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், ஆன்டி இண்டியன் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவுக்கு யூடியூபில் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். அஜித், விஜய்க்கு கூட இந்த அளவு வாழ்த்துக்கள் கமெண்ட் கிடைச்சிருக்காது. அந்த அளவுக்கு ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இண்டியன் படத்துக்கு ‘வாழ்த்துக்கள்’ கமெண்ட் செய்து நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

‘தக்காளி சட்னி சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்’, ‘நாய் கடியால் பாதிக்கப்பட்டோர் சங்கம் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்’, ‘NOTA க்கு வாக்களித்த வாக்காளர்களின் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்’, ‘Master படத்தில் வரும் மருந்து கடைக்காரர் சார்பாக வாழ்த்துக்கள்', ‘மழை, மிளகாய் பஜ்ஜி, இளையராஜா என்று மழை பெய்யும் போது status வைப்பவர்கள் சார்பாக வாழ்த்துக்கள்’, ‘பெட்ரோல் டீசல் விலை போல 100 யை தாண்டி அதிக நாட்கள் படம் ஓட வாழ்த்துக்கள்’ என என்னற்ற வாழ்த்து பதிவுகள் இடம்பெற்றுள்ளதால், இந்த ஸ்னீக் பீக் வீடியோ கமெண்ட்டுகள் வைரலாகி வருகின்றன.