சிம்பு செய்த உருவகேலிகளை டுவிட்டரில் லிஸ்ட் போட்டு... விடாது கருப்பாய் துரத்தும் ப்ளூ சட்டை மாறன்
Simbu : சிம்பு உருவகேலி பற்றி பேசியதைக் கேட்டு கடுப்பாகிப் போன ப்ளூ சட்டை மாறன், அவர் செய்த உருவகேலிகளை லிஸ்ட் போட்டு சாடி உள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. சர்ச்சைக்குரிய விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், இப்படத்தை பற்றி நெகடிவ் விமர்சனத்தை வெளியிட்டு இருந்ததோடு, கவுதம் மேனன் ஒரு வாய்ஸ் ஓவர் பைத்தியம் என்றெல்லாம் தரக்குறைவாக பேசி இருந்தார். இதற்கு சிம்பு ரசிகர்கள் கண்டனனும் தெரிவித்தனர்.
அதேபோல் இப்படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய நடிகர் சிம்பு, ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடியும் கொடுத்தார். உருவகேலி செய்வது ரொம்ப தவறு என்றும், தனிப்பட்ட முறையில் யாரையும் துன்புறுத்த வேண்டாம் எனவும் பேசிய சிம்பு, நான் யாரை சொல்கிறேன் என்பது அவருக்கு புரியும் என மறைமுகமாக ப்ளூ சட்டை மாறனை சுட்டிக்காட்டி பேசி இருந்தார்.
இதையும் படியுங்கள்... நான் நடிச்சதுலயே பிரச்சனையே இல்லாம ரிலீஸ் ஆன படம் ‘வெந்து தணிந்தது காடு’ தான் - சிம்பு எமோஷனல் பேச்சு
சிம்பு உருவகேலி பற்றி பேசியதைக் கேட்டு கடுப்பாகிப் போன ப்ளூ சட்டை மாறன், அவர் செய்த உருவகேலிகளை லிஸ்ட் போட்டு சாடி உள்ளார். அதன்படி சிம்பு நடிப்பில் வெளியான குத்து படத்தில் இடம்பெறும் போட்டுத்தாக்கு பாடல், காளை படத்தில் இடம்பெறும் குட்டிப் பிசாசே பாடல், தம் படத்தில் இடம்பெறும் கண்ணம்மா கண்ணம்மா மீனு வாங்க போலாமா ஆகிய பாடல்களில் உள்ள வரிகளை போட்டு இதெல்லாம் உருவகேலி இல்லையா என அடுக்கடுக்கான கேள்வி எழுப்பி உள்ளார்.
இதெல்லாம் பாடலாரியரைக் கேட்காமல் சிம்புவை ஏன் கேட்கிறீர்கள் என சிம்பு ரசிகர்கள் கேட்க அதற்கு பதிலடி கொடுத்து ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ளதாவது : பாடி, ஆடுறப்ப சிம்புவுக்கு 18+ வயசுதான? கற்பனையானாலும் பெண்ணை பொட்டபுள்ள, பள்ளத்தாக்குன்னு சொல்லலாமா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார். அவரின் இந்த பதிவு வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்கள்... வீணா போனவன் டான் ஆன கதைனு விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்... சக்சஸ் மீட்டில் தரமான பதிலடி கொடுத்த சிம்பு