மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களின் நடித்தவர் பிரபல நடிகர் கலாபவன் மணி. இவர் பல மலையாள படங்களில் கதாநாயகனாகவும், மற்ற மொழி படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லனாகவும் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்.

சுமார் 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள இவர்... கடந்த 2016 ஆம் ஆண்டு, மாரடைப்பால் மரணமடைந்தார் என கூறப்பட்டது. ஆனால் இவருடைய குடும்பத்தினர் கலாபவன் மணியின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறினார். ஆனால் தற்போது வரை மர்மத்திற்கான விடை கிடைக்காமலேயே உள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு கலாபவன் மணி குடும்பத்தினரும் அவருடைய ரசிகர்களும் சேர்ந்து கலாபவன் மணிக்கு உருவ சிலை ஒன்றை அவரது சொந்த ஊரான சாலக்குடியில் வைத்தனர்.

இந்த சிலையில் இருந்து,  இரண்டு தினங்களுக்கு முன்பு, ரத்தம் வடிவதாக ஒரு தகவல் தீயாய் பரவியது. இதுகுறித்து இந்த சிலையை வடிவமைத்தவர்க்கும் தகவல் அனுப்பப்பட்டது. 

அவர்கள் சிலையை பரிசோதனை செய்ததில், அது ரத்தம் இல்லை என்பதை உறுதி செய்துள்ளார்.  இந்த சிலை பைபரால் செய்யப்பட்டது என்றும்,  இந்த சிலையின் கை மற்றும் கால் பகுதிகளை இணைப்பதற்காக உள்ளே, இரும்பு ராடு பொருத்தப்பட்டுள்ளது என்றும் கடந்த ஆண்டு, கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அந்த இரும்பு ராடு துருப்பிடித்தன் காரணமாக தற்போது அடிக்கும் வெயிலில் உள்ளிருக்கும் பைபர் வெப்பத்தால் உருகி துருவோடு சேர்ந்து வெளியே வரும்போது இரத்தக் கலரில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.