நீட் தேர்வுக்கு எதிராக சூர்யா வெளியிட்ட அறிக்கை சோசியல் மீடியாவிலும், அரசியல் வட்டாரத்திலும் விவாத பொருளாக மாறியிருக்கிறது. அதில் நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது குறித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் அறிக்கையில் சூர்யா நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளதாக கூறி சிக்கல்கள் வெடித்தது. 

இது தொடர்பாக அவர் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், “சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும் . சூர்யாவின் கருத்து நீதிபதிகள் மற்றும்  நீதிமன்றத்தின் நேர்மையையும் சிரத்தையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது.  சூர்யாவின் இந்த கருத்து தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் விட்டால், நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படும்” என்று தெரிவித்திருத்தார். இந்நிலையில், நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளதை போலவே, நடிகர் சூர்யா மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், 4 மாணவர்கள் மரணம் காரணமாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எனவும் உயர் நீதிமன்றத்தின் 6 நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினர். 

 

இதையும் படிங்க: நைட்டியில் கூட நயன்தாரா இவ்வளவு அழகா?... விக்னேஷ் சிவன் வெளியிட்ட போட்டோவை பார்த்து விக்கி நிற்கும் ரசிகர்கள்!

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் அறிக்கை குறித்து பாபு கணேஷ் வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “நீங்கள் செய்து கொண்டிருக்கிற ஒவ்வொரு நல்ல விஷயத்தையும் நான் மிகவும் ரசிக்கிறேன். ஒரு சில தவறுகள் செய்யும்போது சுட்டிக் காட்ட வேண்டியது எனது கடமையாக நினைக்கிறேன்.பாரதிய ஜனதா கட்சியின் மாநில கலை மற்றும் கலாச்சாரப் பிரிவின் மாநில செயலாளர் என்ற முறையில் பேச வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் நீட் தேர்வு குறித்து பேசியிருக்கிறீர்கள். நீதிமன்ற உத்தரவு இருக்கும் போது நீதிபதிகளைப் பற்றி பேசியிருக்கிறீர்கள். முதலில் வழக்கறிஞராக எனது கண்டனத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.

 

இதையும் படிங்க: கொசுவலை போன்ற மெல்லிய புடவையில் அனிகா... தேவதையாய் ஜொலிக்கும் வைரல் போட்டோஸ்...!

பாஜக மற்றும் பிரதமரின் திட்டத்தைக் குறி வைத்து அறிக்கை வெளியிடுகிறீர்கள். நல்ல தலைமைப் பண்பு மிக்கவர் நீங்கள். மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் நீங்கள் பாஜகவில் இணைந்து உழைத்தால் நல்ல நிலைக்கு வர முடியும். பாஜகவில் இணைந்தால் நீங்கள் நிறைய சாதிக்கலாம்.பாஜகவின் குறைகளைச் சுட்டிக் காட்டும் நீங்கள் பிரதமர் செய்த நல்ல விஷயங்களை பாராட்டி ஒரு வீடியோ வெளியிட வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து’ இவ்வாறு பாபு கணேஷ் தெரிவித்துள்ளார்.