bjp mla controversy talk

இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியாகத் தயாராக இருக்கும் திரைப்படம், 'பத்மாவதி' ஆனால் இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் ஒரு சில அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவிப்பதோடு நடிகை தீபிகா படுகோன் மற்றும் இயக்குனர் தலைக்கு பேரம் பேசி வருகின்றனர்.

காரணம் இந்தப்படத்தில் ராணி பத்மாவதியை தவறாக சித்திரித்துள்ளதாகவும், வரலாற்றுக்கதையையே மாற்றி இயக்குனர் படம் எடுத்துள்ளதாகவும் கூறப் படுகிறது. 

இந்நிலையில் ஒரு விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஹைதராபாத் பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங், எல்லை மீறி நடிகைகள் தினம்தோறும் புருஷனையே மாற்றுகிறார்கள் எனப் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே "பத்மாவதி படம் வரலாற்றை திரித்து எடுக்கப்பட்ட படம், அதை தெல ங்கானாவில் வெளியிட்டால் தியேட்டர்களை தீயிட்டு கொளுத்துவோம்" என ராஜா சிங் சில நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.