பிரபல நடிகையுமான காயத்ரி ரகுராம், அவருக்கு எப்படி இப்படியொரு தைரியம் வந்தது. ஓவியாவின் இந்த செயலுக்கு காரணம் யார் என ட்விட்டரில் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார். 

பாரத பிரதமர் மோடி நாளை தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை திறந்து வைப்பதற்காக தமிழகம் வர உள்ளார். இதற்காக நேரு உள் விளையாட்டு அரங்கம், சென்னை விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. நாளை காலை டெல்லியில் இருந்து விமானப்படை விமானம் மூலமாக 10.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக ஐ.என்.எஸ். அடையாறு செல்லும் பிரதமர், விழா அரங்கமான நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு செல்கிறார். அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். அதன் பின்னர் பகல் 1.35 மணி அளவில் தனி விமானம் மூலமாக பிரதமர் கொச்சி செல்ல திட்டமிட்டுள்ளார். 

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் சிலர் ட்விட்டரில் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஓவியா முதன் முதலில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் #GoBackModi பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ஓவியாவிற்கு தக்க பதிலடி கொடுத்த பாஜக நிர்வாகியும், பிரபல நடிகையுமான காயத்ரி ரகுராம், அவருக்கு எப்படி இப்படியொரு தைரியம் வந்தது. ஓவியாவின் இந்த செயலுக்கு காரணம் யார் என ட்விட்டரில் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஓவியாவின் செயலுக்கு காரணம் திமுக தான் என குற்றச்சாட்டியுள்ள காயத்ரி ரகுராம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இது திமுகவின் திசைதிருப்பும் வேலை. உதயநிதி, ஸ்டாலின் ஆகியோரை நான் கடுமையாக விமர்சித்து வருவதால் திமுக இதை செய்துள்ளது. அதனால் ஓவியாவை இந்த வேலைக்கு அமர்த்தியுள்ளனர். ஜோக்கர்கள் பிக்பாஸ் போட்டியாளரிடம் இருந்து உதவி கோரியுள்ளனர். பணம் வெவ்வேறு வகையில் வேலை செய்கிறது என பதிவிட்டுள்ளார். 

Scroll to load tweet…