இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். ஸ்ரீபதி இயக்கும் அந்த படத்தில் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிப்பது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு போஸ்டர் வெளியாகி வைரலானது.இந்நிலையில் கடந்த 13ம் தேதி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. முத்தையா முரளிதரனின் சாதனைகளை விளக்கும் விதமாக படம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் அதற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது. 

இதனிடையே முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என தமிழகத்தில் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. பிறப்பால் தமிழராக இருந்தாலும் சிங்கள அரசுக்கும், சிங்களர்களுக்கும் ஆதரவாக செயல்பட்டு வரும் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பது தமிழ் இனத்திற்கு செய்யும் துரோகம் என ராமதாஸ், சீமான்,பாரதிராஜா உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

இதையும் படிங்க: “ராஜா ராணி 2” சீரியலில் நடிப்பதற்காக ஆல்யா மானசா எத்தனை கிலோ எடையை குறைத்தார் தெரியுமா?

இந்நிலையில் பாஜக மாநில துணைத் தலைவரான அண்ணாமலை விஜய் சேதுபதிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். “விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் படத்தில் நடிப்பதில் எந்த வித தவறும் இல்லை என்றும் ஒரு கலைஞனுக்கு சினிமாவில் நடிக்க அனைத்து உரிமையும் உண்டு என்றும் விஜய் சேதுபதி நடிப்பது அவரது தனிப்பட்ட உரிமை என்றும் இதில் அரசியல் கலப்பது சரியல்ல” என்றும் கூறியுள்ளார்.

 

இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷுடன் நடித்துள்ள “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கதிர்... இந்த புகைப்படத்தை பார்த்திருக்கீங்களா?

இதேபோல் சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகை குஷ்புவும் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்து குஷ்பு. இலங்கை கிரிக்கெட் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் விவகாரத்தை திரைப்படத்தை திரைப்படமாக பார்க்கவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.