நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பல திறமைகளை கொண்டவர் கங்கை அமரனின் இளைய மகன் பிரேம் ஜி அமரன் . இவர் கண்டிப்பாக அவர் அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் காமெடி வேடத்திலோ, அல்லது முக்கிய கதாபாத்திரத்திலோ நடித்து விடுவார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சமீபத்தில் இவர் இசையில் வெளிவந்த அச்சமின்றி படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே போல இவர் நடித்த சென்னை 28 பார்ட் 2 படமும் சூப்பர் ஹிட் ஆனது.

இந்நிலையில் இன்று தன்னுடைய 37 வது பிறந்த நாள் கொண்டாடுகிறார், இவருக்கு திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் தொலைபேசி மூலமும், சமூக வலைத்தளம் மூலம் வாழ்த்து கூறி வருகின்றனர்.

பிரேம் ஜி க்கு நியூஸ் பாஸ்ட் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...