கமலஹாசன் தொகுத்து வழங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்து இரண்டு வாரத்திற்கு முன் போட்டியாளராக கலந்துக்கொண்டவர் நடிகை பிந்து மாதவி. இவர் தான் ஓவியாவை அனைவரும் ஓரங்கட்டியபோது, ஓவியாவிற்கு ஆதரவாக இருந்தவர். ஆனால் ஓவியா ஆரவ் மீது வைத்திருந்த காதல் தோல்வி அடைந்ததால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக பிந்து காட்டிய பாசத்தை புரிந்துக்கொள்ளாமலேயே வெளியேறினார்.

அதனை தொடர்ந்து ஒரு சில நாட்கள் அமைதியாகவே இருந்து வந்த பிந்து. இந்து வாரம் தலைவியாக பொறுப்பேற்றுள்ளார். தலைவியாகி பொறுப்பு அதிகரித்ததால் என்னவோ அமைதியாக இருந்த பிந்து தற்போது சண்டை போட தொடங்கியுள்ளார்.

இன்று வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில், சினேகன் ரொம்ப டூ மச்சாக செய்கிறார், அவரை அடிக்கக்கூடாது என்று பார்க்கிறேன் என மிகவும் கோபமாக கத்துகிறார். பிந்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சினேகனும் பிந்துவிடம் சண்டை போடுகிறார்.

உடனே வையாபுரி, சினேகன் வயதில் மூற்றவர் அவரிடம் மரியாதையாக பேச வேண்டும் என கூறியதற்கு பிந்து வயதுக்கும் தவறு செய்தால் கேட்பதற்கும் சம்பந்தம் இல்லை என கூறுகிறார். பின் எதுவாக இருந்தாலும் தன்னிடம் நேராக கூறுங்கள் என்று சினேகனை அசிங்கப்படுத்தும் படி கூறிவிட்டு சென்றார்... இதற்கிடையில் இவர்களது சண்டையை பார்த்து காயத்ரி மிகவும் நக்கலாக பார்த்து சிரித்தார்.