bindhu madhavi in bigg boss
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சுவாரசியம் இருக்க வேண்டுமென போட்டியாளர்களுக்கு ஒரு சில டாஸ்கை செய்ய கட்டளையிடுகிறார்கள். அதன்படி போட்டியாளர்களில் ஒருவர் பேய் பிடித்தது போல் நடிக்க வேண்டுமெனவும், யாரையாவது ஒருவரை மட்டும் தேர்ந்தெடுத்து அவரை ஏமாற்ற வேண்டும் எனவும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இதில் சினேகன் பேய் பிடித்த நபராகவும், பிந்து மாதவி மற்றும் கணேஷ் இவர்கள் இருவரையும் ஏமாற்றவும் போட்டியாளர்கள் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து இரவு 2 மணிக்கு பேய் தன் கழுத்தை பிடித்து நெரிப்பதாக சொல்லி ஓவராக அலறினார்
உண்மை தெரிந்தவர்கள், என்னாச்சி என்னாச்சி என பயப்படுவது போல் விளக்கம் கேட்க, ரியாக்ஷனை எதிர்பார்த்த பிந்து மாதவியிடம் ஒரு ரியாக்ஷனும் இல்லை . அமைதியாக எழுந்து வந்து பார்த்துவிட்டு தூக்க கலக்கத்திலேயே மீண்டும் உறங்க சென்றுவிட்டார்.இந்த சம்பவம் மற்ற போட்டியாளர்களுக்கு பிந்து மாதவி கொடுத்த பல்ப் போன்று தோன்றியது
