bindhu asking question for gayatri and support barani

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புது போட்டியாளராக களமிறங்கியுள்ள பிந்து மாதவி, போட்டியாளர்கள் அனைவராலும் வெறுக்கப்பட்டு மன உளைச்சலால் சுவர் ஏறி வெளியேற தயாரான பரணிக்கு ஆதரவாக பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார்.

இது குறித்து பதிலளித்த காயத்ரி சிரித்துக்கொண்டு அனைவரையும் பரணி தான் மன உளைச்சலுக்கு ஆளாக்கினார். அதனால் அவரிடம் பேச யாரும் தயாராக இல்லை என கூறினார்.

அப்போதைய தலைவர் யார் என பிந்து மாதவி காயத்ரியிடம் கேள்வி எழுப்ப, நான் தான் அதிலும் அப்போது என்னுடைய தலைவர் பதவி முடியும் நேரம். நான் ஏன் அவரை தடுக்க வேண்டும். அவர் வேண்டும் என்றே சீன் போட்டார். 

இரண்டு வயது சின்ன குழந்தையா நம்ப தடுக்க. இங்கு இருந்து வெளியில் போக வழி இல்லை. அப்படியே மேல இருந்து கிழே விழுந்தாலும் கால் தானே உடையும் என மிகவும் அசால்டாக காயத்ரி பதிலளித்தார். இதை கேட்ட பிந்து, ஒரு வேலை நாளை நம்மையும் இப்படித்தான் நினைப்பார்கள் என்பது போல் விழி பிதுங்கி நின்றார்.