இணையங்களில் பகிரப்படும் சில தகவல்கள் நம்மைப் போகிற போக்கில் நம்மை முட்டாளாக்கிவிடும். சில தகவல்கள் அதன் உண்மைத் தன்மையையும் மீறி சுவாரசியத்துக்காகவே அதிகம் ரசிக்கப்படும்.

இணையங்களில் பகிரப்படும் சில தகவல்கள் நம்மைப் போகிற போக்கில் நம்மை முட்டாளாக்கிவிடும். சில தகவல்கள் அதன் உண்மைத் தன்மையையும் மீறி சுவாரசியத்துக்காகவே அதிகம் ரசிக்கப்படும்.

இதில் இரண்டாவது வகையான செய்தி ஒன்று இன்று காலைமுதல் முகநூலில் பரபரப்பாகிவருகிறது. அதாவது சேத்தூரில் விஜயின் ‘சர்கார்’ படம் வெளியிடப்பட்ட முதல்நாளே தியேட்டரை விட்டுத் தூக்கப்பட்டு, டப்பாப் படமான ‘பில்லா பாண்டி’ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதாம். அதில் ஒரு கூடுதல் காமெடி தியேட்டரின் பெயர் ‘ஈ.பி.எஸ்’. 

இதைப்பதிவிட்டவர் விஜய்யின் ஜென்ம விரோதி போல. செய்திக்குக் கீழே போட்ட கமெண்டில்... இலவசத்த தூக்கிப்போடுறது இருக்கட்டும். இங்க ஒரு தியேட்டர் ஒரே நாள்ல சர்கார தூக்கிப் போட்டுட்டு பில்லா பாண்டிய போட்டுட்டாங்க’ என்றும் கமெண்ட் போட்டிருக்கிறார்.

இந்த தகவல் ஒரிஜினலா டுபாக்கூரான்னு ஒரு எட்டு சேத்தூர் வரைக்கும் போய் கேட்டுச் சொல்லுங்க மக்கழே...