தல அஜித்துக்கு உள்ள மாஸ் ரசிகர்களின் கூட்டத்தை பற்றி சொல்லவே வேண்டாம். அவர் படங்கள் குறித்த தகவல்கள் வெளிவந்தால் மட்டும் அல்ல, எந்த ஒரு தகவல் வெளியானாலும் அதனை வைரலாக்கி விடுவார்கள். 

மேலும் அஜித் ரசிகர்கள் பலர்,  'தல'க்கு நற்பணி மன்றங்கள் அமைத்து அதன் மூலம் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறார்கள்.

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான, 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து, தல ரசிகர்களை உச்ச கட்ட சந்தோஷப்படுத்தியது. இதை அடுத்து ரசிகர்கள் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில், உருவாக உள்ள 60 வது படத்தை பற்றிய தகவலுக்கு செம்ம வைட்டிங்.

இது ஒரு புறம் இருக்க, பிரபல பைக் ரேஸ் வீராங்கனை, அலிஸா அப்துல்லா கடந்த 5 வருடத்திற்கு முன் எடுத்த அஜித் ரேஸ் பைக் ஓட்ட தயாராகும் வீடியோவை இன்ஸ்டாராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் கவனமாக செல்லும்படி அஜித்துக்கு வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில் அஜித் மிகவும் இளமையாக காட்சியளிக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.