ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த 'பிகில்' படத்தின் ட்ரைலர் இன்று மாலை சரியாக 6 மணிக்கு வெளியானது. 

'பிகில்' படத்தின் ட்ரைலரை காண, பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு, ட்ரைலரில் இடம்பெற்றுருந்த ஓவ்வொரு காட்சிகளும், அவர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இருந்தது.

ஆரம்பத்திலேயே... ஒரு குட் மார்னிங் என இந்துஜாவை சொல்ல வைத்து, என்ட்ரி கொடுக்கிறார் விஜய்.  ரௌடியை கூட்டிட்டு வந்து கோச் என சொல்லுறாங்க என இந்து கொந்தளித்து பேசும் காட்சியிலும் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.

இதை தொடர்ந்து காட்டப்படும் சண்டை காட்சி, என்ட்ரி காட்சி, சொடக்கு போடும் காட்சி என ஒவ்வொன்றிலும் விஜய் வேற லெவலில் தெரிகிறார்.

 

நடிகை நயன்தாரா, காதலுக்கு மட்டுமே இந்த படத்தில் வருகிறாரா?  என தோன்ற வைத்துள்ளது இந்த ட்ரைலர். 'ரொம்ப ஆக்ஷன் ஹீரோவா மாறிட்ட மைக்கில். காதலுக்கு மரியாதையெல்லாம் உனக்கு மறந்தே போய் விட்டது என விஜயுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சி தூள். மேலும் யோகி பாபுவுடன் ஒரு காமெடி மற்றும் ரொமான்டிக் பாடல் என மூன்று இடங்களில் மட்டும் பிட்டு பிட்டாக வந்து செல்கிறார். 

ஆனால் இதை தொடர்ந்து வரும் அனைத்து காட்சிளும், ஆக்ஷன் மற்றும் கடுமையான போட்டிக்கு பயிற்சி பெரும் நடிகைகள் பற்றிய காட்சி மட்டுமே காட்டப்பட்டுள்ளது. இந்துஜாவின் காட்சி மற்ற நடிகர்களை விட அதிகமாகவே காட்டப்படுகிறது. 

சிங்கப்பெண்ணே பாடலின் நயன்தாராவும், கால் பந்து உடை அணிந்திருப்பது போல் காட்டப்பட்டாலும், உண்மையில் சிங்கப்பெண் இந்துஜா தானோ... என்கிற சந்தேகம் ட்ரைலர் வெளியான பின் தோன்றுகிறது. எப்படியும் தீபாவளிக்கு தெரிந்து விடும் யார் சிங்கபெண் என்று அது வரை பொறுத்திருப்போம்.