'பிகில்' திரைப்படம் வெளியாவதற்குள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது என்பது நாம் அறிந்தது தான். அந்த வகையில், ட்விட்டரில் கூட அதிக லைக்குகளை பெற்று, 'பிகில்' பட போஸ்டர் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் அடுத்த சாதனையை செய்ய 'பிகில்' படம் தயாராகி உள்ளது என்று தான் சொல்லவேண்டும்.

அதாவது, இத்தனை நாள், விஜய் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த, பிகில் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தகவலை தற்போது வைரலாக்கும் முழு முயற்சியில் இறங்கியுள்ளனர் விஜய் ரசிகர்கள்.

இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவருடைய ட்விட்டர் பக்கத்தில், அக்டோபர் 12 ஆம் தேதி, பிகில் பட ட்ரைலர் வெளியாக உள்ளதாக விஜய்யின் ஒரு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளார். 

அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் இணைந்து நடித்து வரும் இந்த படத்தில், பரியேறும் பெருமாள் கதிர், யோகிபாபு, மேயாத மான் சிந்துஜா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.