நேற்று முன்தினம் வெளியான விஜய்யின் பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கைத் தொடர்ந்து,  நள்ளிரவு 12 மணிக்கு விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ‘டபுள் ட்ரீட்டாக’ இரண்டாவது லுக்கையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்தளித்தது படக்குழு.

விஜய்யின் 63ஆவது படமான பிகில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் நேற்று முன்தினம் வெளியானது முதல் இணையத்தை கலக்கி வரும் இந்த போஸ்டர்கள் இன்று பிறந்தநாள்க்கு ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், விஜய்யின் பிறந்தநாளை சிறப்பிக்கும் மற்றொரு அம்சமாக முன்னரே அறிவித்தபடி, பிகில் படத்தின் இரண்டாவது லுக் மற்றும் மூன்றாவதாக அவரு போஸ்டரையும்  வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது படக்குழு.  விஜய்யின் நான்கு விதமான தோற்றங்கள் இந்த போஸ்டரில் வெளியாகியுள்ளது.

குப்பத்தில் மீன் மார்க்கெட்டில் பெயர் பிகில் எனவும், கால் பந்தாட்ட வீரராக வரும் மகனின் பெயர் மைக்கேல் எனவும் போஸ்டரை பார்க்கும் போது நம்மால் கணிக்க முடிகிறது. நெற்றியில் குங்குமம், கழுத்தில் சிலுவை, கையில் கத்தியுடன் இருக்கும் விஜய்யின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

பிகில் போஸ்டரில் இரண்டு விஜய் இருப்பது போல் உள்ளது. அதைப் பார்த்து டபுள் ஆக்‌ஷன்! அப்பா- மகன் என்கின்றனர் சிலர். ஆனால் அவரது ரசிகர் மன்றத்தினரோ அண்ணன் - தம்பி என்கின்றனர். ஆனால், சினிமா விமர்சகர்களோ இது ஒரே விஜய் தான், பல வருடங்களுக்கு முன்பாக விளையாட்டில் உள்ள அரசியலால் தனக்கு வாய்ப்பு கிடைக்காததால் தன்னுடைய குடும்பத் தொழிலை கவனித்து வருவதாகவும் விஜய்யின் பிளாஷ்பேக் கேட்ட  பெண்கள் அணியின் கோச்சாக வரும்படி மீன்மார்கெட்டில் இருக்கும் வயதான விஜய்யிடம் உதவி கேட்டு, அவர் அந்த டீமின் கோச்சாக வருவார் என சொல்கிறார்கள்.

ஆனால் பிகில் டீமின் காதைக் கடித்தாலோ....தீபாவளி வரைக்கும் பொறுத்திருங்க! பெரிய சர்ப்பரைஸ் இருக்குது! தரமா சம்பவம் ஒன்னு பண்ணப்போறோம் என்கின்றனர்.