சீனாவில் உருவான கொரோனா, உலகம் முழுதும் வேகமாக பரவி சர்வதேசத்தையே அச்சுறுத்திவருகிறது. உலகம் முழுதும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால்,  தனிமைப்படுதலே அதிலிருந்து தப்பிப்பதற்கான ஒரே வழியாக உலகம் முழுதும் பின்பற்றப்படுகிறது. 

இதையும் படிங்க: அந்த இடத்தில் யாஷிகா ஆனந்த் குத்தியுள்ள நச் டாட்டூ... ரசிகர்கள் பார்வைக்காக கொடுத்த கவர்ச்சி தரிசனம்...!

நேற்று இரவு 12 மணி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை  தொடர்ந்து 21 நாட்களுக்கு இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக பாரத பிரதமர் மோடி அவர்கள் அறிவித்துள்ளார். இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க: என்னது இது கொரோனா மாஸ்க் சைஸுக்கு டிரஸ் போட்டிருக்கீங்க... சாக்‌ஷியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...!

இந்நிலையில் கொரோனா என்ற வார்த்தைக்கு சூப்பரான விளக்கம் கொடுத்து பிகில் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி போட்டுள்ள ட்வீட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிகில் பட தயாரிப்பை ஆரம்பித்த போது டுவிட்டரில் படு ஆக்டிவாக செயல்பட தொடங்கிய அர்ச்சனா கல்பாத்தி, அதன் பின்னர் சோசியல் மீடியாவில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தற்போது கொரோனாவுக்கு நச்சுனு ட்வீட் போட்டு டிரெண்டாகிவிட்டார். 

இதையும் படிங்க: ரண களத்திலும் கிளு,கிளுப்பு... சட்டை பட்டனை கழட்டி விட்டு தாறுமாறு கவர்ச்சி காட்டிய ரம்யா பாண்டியன்....!

கொரோனா என்றால் கோட்ட தாண்டி ரோட்டுக்கு போனா நல்லது இல்ல என்று அர்த்தம் என ட்வீட் செய்து அனைவரையும் வீட்டிலேயே பத்திரமாக இருக்குமாறு அர்ச்சனா கல்பாத்தி வலியுறுத்தியுள்ளார். அந்த ட்வீட்டை பார்த்த விஜய் ரசிகர்கள் அக்கா... நாங்க பத்திரமா இருக்கோம்... நீங்களும் வீட்டிலேயே இருங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.