தெறி, மெர்சல் ஹிட்டை தொடர்ந்து தளபதி விஜய் - இயக்குநர் அட்லி கூட்டணி ஹாட்ரிக் அடித்திருக்கும் படம் "பிகில்".

இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமத்துள்ளார். மகளிர் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், ராயப்பன் மற்றும் பிகில் என இரண்டு கேரக்டரில் விஜய் நடித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த பிகில் படம் விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. குறிப்பாக, படத்தில் சிறிது நேரமே வரும் அப்பா ராயப்பன் கேரக்டர் ரசிகர்களை வெகுவாக ரசிக்க வைத்துள்ளது. 

மேலும், கலவையான விமர்சனங்கள் வந்தாலும், வசூல் ரீதியாக பாக்ஸ் ஆஃபிஸ் கிங் என்பதை விஜய் நிரூபித்துள்ளார். 

இதனிடையே, பிகிலில் தங்களின் மனதை கொள்ளையடித்த ராயப்பன் கேரக்டர் சிறிதுநேரத்திலேயே முடிவதால், அவரது கதையை ப்ரீகுவலாக எடுக்க வேண்டும் என அட்லிக்கு ரசிகர்கள் அன்பு கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இதுகுறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள இயக்குநர் அட்லி, "செஞ்சிட்டா போச்சு நண்பா" என பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.