படங்களில் தனது எண்ட்ரி சீன் படு மாஸாக இருக்கவேண்டும் என்பதில் மிகப்பிடிவாதமாக இருக்கும் விஜய் ‘பிகில்’பட ஓப்பனிங் காட்சியில் பில்ட் அப் கம்மியாக இருப்பதாகவும் அதை, தான் வெளிநாடு செல்லுமுன் மிக விரைவாக அதை ரீ ஷூட் பண்ணும்படி இயக்குநர் அட்லிக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் உள்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தீபாவளிக்கு மூன்று நாட்கள் முன்னதாக 24ம் தேதியன்று வெளியாகவிருக்கும் விஜய்யின் ‘பிகில்’பட ஆடியோ ரிலீஸ் நாளை மறுநாள் வியாழனன்று சாய்ராம் கல்லூரியில் நடைபெறவிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நடந்து போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் அப்படக்குழுவின் உள்வட்டாரத்திலிருந்து இன்னிம் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணிநேர ஷூட்டிங் வரை பாக்கியிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

அத்தகவலின்படி ‘பிகில்’படத்துக்காக எடுக்கப்பட்டுள்ள விஜய்யின் எண்ட்ரி காட்சி அவ்வளவு மாஸாக இல்லை என்றும் அதற்கு இன்னும் ஓரிரு மணி நேரங்கள் ஒதுக்கி ரீஷூட் செய்ய விஜய் விரும்புவதாகவும் தகவல் பரவி உள்ளது. இதனால் ஆடியோ ரிலீஸ் முடிந்தவுடன் குடும்பத்துடன் வெளிநாடு செல்லத் திட்டமிட்டிருக்கும் விஜய் தனது பயணத்தை ஒருநாள் தள்ளித் திட்டமிட்டிருக்கிறாராம். இச்செய்தி வெளியே பரவினால் அது படத்துக்கு மைனஸாக இருக்கும் என்பதால் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான படக்குழுவினரை வைத்து அக்காட்சியை ஷூட் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.