தளபதி விஜய், அட்லி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் 'பிகில்'. தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்த படத்தின், அடுத்த அப்டேஷனுக்கு விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விஜய் முதல் முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடிய செகண்ட் சிங்கில் வெறித்தனம் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்த பாடல் வெளியான கணமே, விஜய் ரசிகர்கள் இந்த பாடலை வைரலாக்க துவங்கி விட்டனர். அதிலும் இந்த பாடலை விஜய்யே பாடியுள்ளார் என்றால் சொல்லவா வேண்டும். சமூகவலைத்தளத்தையே மிரட்டி விட்டனர்.

இந்நிலையில் இந்த பாடல் வெளியாக்க 6 தினங்களே ஆகியுள்ள நிலையில், இந்த பாடல் 1 மில்லியன் லைக்குகளை பெற்று, வெறித்தனமான சாதனையை செய்துள்ளது. இந்த தகவலை விஜய் ரசிகர்கள் #VerithanamHitsRecord1MLikes என்கிற ஹாஷ்டாக் பயன்படுத்தி வைரலாகி வருகிறார்கள்.

ஏற்கனவே, 'பிகில்' படத்தில் இருந்து வெளியான 'சிங்கப்பெண்ணே' லிரிக்கல் பாடல் சமீபத்தில் வெளியாகி, அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்த நிலையில் அதை தொடர்ந்து வெளியான 'வெறித்தனம் பாடலும்' மிக குறுகிய நாட்களில் இப்படி ஒரு சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.