சமீப காலமாக, விஜய், அஜித், ரஜினி , கமல் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களில் இருந்து,  அவ்வபோது அந்தப் படத்தின் காட்சிகள், புகைப்படங்கள், பாடல்கள், வெளியாகி வருவது தொடர்கதையாகி வருகிறது.

அதேபோல் கடந்த ஓரிரு தினத்திற்கு முன், 'பிகில்' படத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் நடிகர் விஜய், முதல் முதலாக பாடியுள்ள 'வெறித்தனம்' பாடல் சமூகவலைதளத்தில் வெளியாகிவிட்டது, என ஒரு தகவல் வைரலாக பரவியது.  இப்படி வெளியான தகவலால் படக்குழு தரப்பை சேர்ந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர். 

இந்நிலையில் இதுகுறித்த உண்மையான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  அதாவது 'வெறித்தனம்' பாடல் சமூகவலைதளத்தில் வெளியாகவில்லை என்று படக்குழு தரப்பில் இருந்து  உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் சில பத்திரிகைகளிலும் இந்த தகவல் பொய் என அறிவித்துள்ளனர்.

இந்தப்படத்தில் நடிகர் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார்.  அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.  மேலும் 'பரியேறும் பெருமாள்' பட நாயகன் கதிர், 'மேயாத மான்' சிந்துஜா, உள்ளிட்ட மிக பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். இயக்குனர் அட்லீ இயக்கியுள்ள இந்த படத்தை கல்பாத்தி அகோரம் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.