விஜய் தற்போது நடித்து வரும் பிகில் படத்தின் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என, இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இன்று மாலை அறிவித்திருந்தார். மேலும் ரிலீஸ் தேதி குறித்து வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், படத்தின் சென்சாருக்கு பிறகு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என கூறியிருந்தார்.

இவரின், இந்த தகவல் விஜய் ரசிகர்களை உற்சாக படுத்தியதோடு, இன்று வெளியாக இருக்கும் போஸ்டர் பற்றிய எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்தது. இன்றைய போஸ்டரில் விஜய் என்ன கெட்டப்பில் இருப்பர்? என்ன தகவல் வெளியாகும் என எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர் ரசிகர்கள்.

ஆனால் இந்த போஸ்டர் ரசிகர்களுக்கு சிறு ஏமாற்றத்தை கொடுத்தது என்றே கூறலாம். இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அர்ச்சனா கல்பாத்தியும் ஆடியோ வெளியிட்டு விழா தேதியை அறிவிக்கும் விதமாகவே இந்த போஸ்ட்டரை வெளியிட்டுள்ளார்.

ஆனால் இந்த போஸ்டரில், விஜய்யின் மாஸ் கெட்டப்பை பார்த்து ரசிகர்கள் செம்ம ஹாப்பி.   இந்த போஸ்டரில் விஜய் சிவப்பு நிறத்தில், கால் பந்து ஜெர்சியுடன், கயிலி  கட்டிக்கொண்டு, கையில் கத்தியுடன் நின்று கொண்டிருக்கிறார். அவருடைய உடையில் 5 என்கிற எண் பொறிக்கப்பட்டுள்ளது. அவரின் பின் பக்கத்தில் நெருப்பு எரியும் பேக் கிரௌண்ட் மற்றும் நிறைய கால் பந்துகள் உள்ளது.
இந்த கால்பந்துகளை சுழன்று அடிக்க நெருப்பு போல் தயாராகிறாரோ விஜய்.

இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பற்றிய ப்ரோஷனுக்காக இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளார் அர்ச்சனா. ஆடியோ வெளியீட்டுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில்... விஜய் ரசிகர்கள் ஒவ்வொரு நாளும் விதவிதமான பேன் மேடு போஸ்டர்களை வெளியிட்டு ப்ரோமோசன் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின், விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா, நடித்துள்ளார். மேலும் பரியேறும் பெருமாள் கதிர், யோகி பாபு , சிந்துஜா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அட்லீ இயக்கி இருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.