விஜய் ரசிகர்கள் அனைவரும் இந்த தீபாவளியை, 'பிகில்' தீபாவளியாக கொண்டாட இப்போதே தயாராகி வருகிறார்கள். மேலும் படத்தின் மீது உள்ள சுவாரஸ்யத்தை, அதிகப்படுத்தும் வேளையிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள் படக்குழுவினர்.

படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தற்போது பெண்களை பெருமை படுத்தும் விதமாகவும் அவர்களின் மனதில் உள்ள வலியை உரக்க சொல்லும் விதமாகவும் , 'மாதரே... மாதரே...'என்கிற பாடலை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

இந்த பாடல் தற்போது, ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை இந்த லிரிக்கல் வீடியோ பாடல், ஊடகத்தில் மட்டும், 957,272 ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. அதே போல் லைக்குகளும் குவிந்து வருகிறது.

பாடலாசிரியர் விவேக் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலுக்கு, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் அட்லீ, தெறி, மெர்சல், ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜயுடன் கை கோர்த்துள்ள இந்த படம், ஏற்கனவே விஜய், அட்லீ இயக்கத்தில் நடித்த இரண்டு படங்களின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்பதே படக்குழுவினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பெண்களை பெருமை படுத்தும் விதமாக வெளியாகியுள்ள இந்த பாடல், கால் பந்து, விளையாட்டு டீமில் இடம் பெற்றுள்ள ஓவ்வொரு பெண்களின் இன்ட்ரோ பாடலாக இருக்கலாம் என்பது ரசிகர்களின் யூகமாக உள்ளது. 

அந்த பாடல் இதோ...