அட்லீ இயக்கத்தில் விஜய் மற்றும் நயன்தாரா நடித்து முடித்துள்ள ‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு பிரமாண்டமாக  வெளியாக உள்ளது. ஏற்கனவே வெளியான இந்த படத்தின் போஸ்டர், மற்றும் பாடல்கள், மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், டீசர் மற்றும் ட்ரைலர் ரிலீசுக்கு வழி மீது விழி வைத்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

இது ஒரு புறம் இருக்கும் நிலையில், தற்போது 'பிகில்' படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகி தலை சுற்ற வைத்துள்ளது. குறிப்பாக இதுவரை தமிழில் வெளியான படங்களில் '2 . ௦' படத்திற்கு பிறகு 'பிகில்' படம் தான் அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாம். 

தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுகிறது. கடந்த ஆண்டு பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0 ' படம் கிட்ட தட்ட 570 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கால் பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.  ஏ ஆர் ரகுமான் இசையில் இப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.