தீபாவளிக்கு ஒலிக்க துவங்கிய 'பிகில்' சத்தம் இன்னும் ஓய்ந்தபாடு இல்லை. அதிலும் இப்படம் வெளியான 16 நாட்களில், உலக அளவில் 300 கோடி வசூலித்து சாதனை செய்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து,  விஜய் ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகிறார்கள். 

தீபாவளிக்கு ஒலிக்க துவங்கிய 'பிகில்' சத்தம் இன்னும் ஓய்ந்தபாடு இல்லை. அதிலும் இப்படம் வெளியான 16 நாட்களில், உலக அளவில் 300 கோடி வசூலித்து சாதனை செய்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து, விஜய் ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பொதுவாக, விஜய் படம் என்றாலே விஜய் ரசிகர்கள் மத்தியில் மட்டும் இன்றி, அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்புகள் நிறைந்திருக்கும். அதிலும் ஏற்கனவே, விஜய் மற்றும் அட்லீ காம்போவில் வெளியான, 'தெறி', 'மெர்சல்' என இரண்டு படங்கள், வெற்றி படங்களாக அமைந்ததால், 'பிகில்' படத்தில் மீதும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தது.

இப்படம் பெண்கள் கால் பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்ததால், பெண்களும் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

தீபாவளியை முன்னிட்டு வெளியான, இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே கூறலாம். பலரும் தங்களுடைய அதிருப்தியை சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தனர். பல நெகடிவ் விமர்சனங்கள் 'பிகில்' படத்திற்கு எதிராக எழுந்த போதிலும், தொடர்ந்து பல திரையரங்கங்களில் இப்படம் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும், கடந்த 25 தேதி வெளியான பிகில் திரைப்படம், 16 நாட்களில் உலக அளவில் 300 கோடி வசூல் சாதனை செய்துள்ளதாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் வெளியாக, விடுவார்களா விஜய் ரசிகர்கள். சமூக வலைத்தளத்தையே தெறிக்க விட்டு வருகிறார்கள்.

Scroll to load tweet…