Asianet News TamilAsianet News Tamil

28 பேருக்கு மட்டுமே முன் ஜாமின்...இன்னும் கைது பயத்தில் விஜய் ரசிகர்கள்...

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் கடந்த 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அப்போது, சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதியில்லை என்றும், சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கேட்டால் பரிசீலிக்கப்படும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார். இந்நிலையில், கிருஷ்ணகிரியில் பிகில் படத்திற்கு சிறப்புக்காட்சி வேண்டும் என வலியுறுத்தி விஜய் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு பொதுச்சொத்துக்களையும், பொருட்களையும் சேதமாக்கினர். சிசிடிவி மூலமாக குற்றவாளிகள் அத்தனை பேரையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
 
bigil issue...court releases 28 vijay fans
Author
Chennai, First Published Nov 5, 2019, 4:00 PM IST

தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்பு ரிலீஸான ‘பிகில்’படத்துக்கு சிறப்புக் காட்சி கேட்டு ரகளையில் ஈடுபட்டு கைதான ரசிகர்களில் 28 பேருக்கு மட்டுமே முன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மற்ற புள்ளிங்கோ சிறையில் இன்னும் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் நிலையில் மேலும் சில முக்கிய நிர்வாகிகளைக் கைது செய்ய போலீஸார் தேடி வருவதாகத் தெரிகிறது.bigil issue...court releases 28 vijay fans

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் கடந்த 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அப்போது, சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதியில்லை என்றும், சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கேட்டால் பரிசீலிக்கப்படும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார். இந்நிலையில், கிருஷ்ணகிரியில் பிகில் படத்திற்கு சிறப்புக்காட்சி வேண்டும் என வலியுறுத்தி விஜய் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு பொதுச்சொத்துக்களையும், பொருட்களையும் சேதமாக்கினர். சிசிடிவி மூலமாக குற்றவாளிகள் அத்தனை பேரையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கிருஷ்ணகிரி நகர போலீசார் ரகளையில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி 50 பேரில் 28 பேருக்கு மட்டும் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கினார். மேலும், ரகளையின் போது சேதப்படுத்திய ரூ.99 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களுக்காக ரூ. 1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஜாமீனில் வெளிவரும் 28 பேரும், தினமும் காலை 9.30 மணிக்கு கிருஷ்ணகிரி நகர காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது. bigil issue...court releases 28 vijay fans

கைது செய்யப்பட்டவர்கள் மீது, பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை, தேடி வருவதாக போலீசார் முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்திருந்தனர். இதனால், தங்களையும் போலீசார் கைது செய்வர் என எண்ணிய, விஜய் ரசிகர் மன்ற மாவட்ட முக்கிய நிர்வாகிகள், முன்ஜாமின் கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். ‘என் ரசிகர்கள் மேல் கைவைத்தால்...? என்று பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் முழங்கிய விஜய் இதுவரை இச்சம்பவம் குறித்து ‘மூச்’விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios