தமிழ் திரையுலகில் தளபதி விஜய் - தல அஜித் இருவருமே தங்களுக்கென தனித்தனியே மாபெரும் ரசிகர் பட்டாளங்களை உருவாக்கி வைத்துள்ளனர். 

இவ்விருவரின் படங்கள் வந்தாலே, யார் ஓபனிங் கிங்.... யாருடைய படம் வசூலை குவிக்கிறது... என்ற பேச்சும், எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகமாகவே இருப்பதை பார்க்கலாம். 


இந்த ஆண்டு ஆரம்பத்தில் பொங்கல் விருந்தாக வெளியான அஜித்தின் 'விஸ்வாசம்' படம், குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்து, வசூலை வாரிக்குவித்தது. அஜித் நடித்த படங்களிலேயே அதிக வசூலை குவித்த படம் என்ற சாதனையையும் படைத்தது.

இதேபோல், தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் 'பிகில்' படம் ரிலீசாகியுள்ளது. இந்தப் படமும் வெளியான ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக செய்திகள் வந்தன. 

தமிழகத்தில் மட்டும் இந்தப் படத்தின் வசூல் ரூ.100 கோடியை தாண்டிவிட்டதாகவும் கூறப்பட்டது. 
இதனை உறுதி செய்யும் வகையில், 'பிகில்' படத்தை தமிழகத்தில் வெளியிட்ட ஸ்கிரீன் சீன் நிறுவனத்தினர், தமிழகம் முழுவதும் 7 நாட்களில் ரூ.100 கோடி வசூலைக் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

 
இந்த வசூல், 8 நாட்களில் 'விஸ்வாசம்' கொடுத்த அதிகாரப்பூர்வ வசூலான ரூ.125 கோடியைவிட குறைவுதான். ஏனென்றால், பிகில் படத்தின் 8-வது நாள் வசூல் நிச்சயம் 25 கோடியை தாண்டியிருக்காது என்பதுதான் நிதர்சனம். இதிலிருந்து, விஸ்வாசம் படத்தின் ஒருவார தமிழ்நாடு வசூலை, பிகில் முறியடிக்கவில்லை என்பதே உண்மையான நிலவரம் என  கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.=