180 கோடி பட்ஜெட்டில் உருவான விஜய் நடித்த பிகில் படத்துடன் எதிர்த்து போட்டி போடுகிறது கார்த்திக் நடித்த கைதி. ஒருபுறம் தீபாவளிக்கு பிகில் என ட்ரெண்டாகி வந்தாலும் கைதியும் அதனுடன் போட்டிபோட்டு வருகிறது. எப்போதுமே உச்ச நட்சத்திரங்களின் படங்களை ஓடவைக்க அவரது ரசிகர்கள் துடியாய்த் துடிப்பார்கள். ஆனால், இந்த முறை விஜய் ரசிகர்கள் பிகில் படத்தை மட்டுமல்லாமல் கைதி படத்தையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். 

2015ல் விஜய் ரசிகர்களுக்கு இருந்த குழப்பான மனநிலை பிகில் படத்தை அடுத்து அவர்களுக்கு மீண்டும் எழத் தொடங்கி இருக்கிறது. கத்தி, துப்பாக்கி என ப்ளாக் வெற்றிகளை தர இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை மட்டுமே நம்பி இருக்கிறாரா? என கேள்விகள் எழத் தொடங்கிய காலம் அது. 

அப்போது விஜய் எடுத்த அந்த முடிவு தமிழ் திரையுலகத்தையே ஆச்சர்யமாக பார்க்க வைத்தது. முன்பெல்லாம் உச்சநட்சத்திரங்களை இயக்க வேண்டும் என்றால் ஒரு இயக்குநர் குறைந்த பட்சம் நான்கைந்து வெற்றிப்படங்களையாவது கொடுத்து இருக்க வேண்டும் என்கிற விதி இருந்தது. ஆனால் அதையெல்லாம் உடைத்தெறிந்தார் விஜய். அந்த முடிவு தன்னை சுற்றி வந்த கேள்விகளுக்கு பதிலாகவும், கோலிவிட்டில் முதல் படி எடுத்து வைத்திருந்த ஒரு இயக்குநருக்கு ஜாக்பாட்டாகவும் அமைந்தது. அப்போது தொடங்கியது விஜய் - அட்லி கூட்டணி. 

அட்லி விஜய்க்கு மாஸ் கூட்டுவாரா என குழப்பத்தில் ஆழ்ந்தனர். இதனால் அட்லீயின் குறும்படங்கள், அவர் பயன்படுத்த தொடங்கிய தொழில்நுட்ப கலைஞர்கள் என சல்லடை போட்டு தேட ஆரம்பித்தனர் விஜய் ரசிகர்கள். யாரும் எதிர்பார்த்திராத வாய்ப்பை ஆச்சர்யத்தை கொடுத்தார் அட்லீ.  அதற்கு எடுத்துக்காட்டு மீண்டும் தனது படத்தை இயக்கும் வாய்ப்பை அட்லீக்கு கொடுத்தார் விஜய். விஜயின் ரசிகனாக நான் அவரது படத்தை இயக்குவதாக கூறுவார் அட்லீ. தெறி, மெர்சல் என வெற்றியை கொடுத்த அட்லீ மூன்றாவதாக இயக்கிய பிகில் படத்தின் தோல்வியால், இனி விஜய் படத்தில் அட்லீ இல்லை என்கிற முடிவை எடுக்க வைத்துள்ளார். 

கைதி பிகிலை தோற்கடிக்கும் என்கிற காரணத்தை முன்பே விஜய் உணர்ந்ததாலோ என்னவோ, கைதியை இயக்கிய லோகேஷ் கனகராஜுக்கு தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்து இருக்கிறார். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் வாய்ப்பளித்த விஜய்யின் படத்திற்கெதிராகவே தனது படைப்பான கைதியை போட்டியாக வெளியிட்டுள்ளார் லோகேஷ். தளபதி படத்தையே ஒரு மிடில்கிளாஸ் நடிகரை வைத்து தோற்கடித்து விட்ட லோகேஸ் அப்படி கைதியில் என்ன செய்திருக்கிறார். கதை என்ன? அடுத்து தங்களது தளபதியை எப்படி பயன்படுத்தப்போகிறார் என்பதை அறிய ஆவலோடு எதிர்பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள். 

எதார்த்த கதைக்களத்தில் படங்களை இயக்கும் லோகேஷ் கனகராஜ், பிரம்மாண்ட நாயகனாக வலம் வரும் விஜயை எப்படி தனது படத்திற்குள் எதார்த்தமாக கொண்டுவரப்போகிறார் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்கிறார்கள். அத்தோடு விஜய் 64 படத்தில் விஜய் சேதுபதியும் இருப்பதால் அந்த எதிர்பார்ப்பு இன்னும் எகிறிக் கிடக்கிறது. 

பிகில் அட்டர்ப்ளாப் தோல்வி என்பதை வெளிப்படையாக அறிந்த விஜய் ரசிகர்கள் பிகில் படத்தை கூட பார்க்காமல் இப்போது கைதி படத்தை பார்க்க படைபடையாய் கிளம்பி வருகிறார்கள். இதுவும் விஜய் மீது அவரது ரசிகர்கள் கொண்ட வெறித்தனம்தான்.