Asianet News TamilAsianet News Tamil

விஜயின்’பிகில்’பட ஆடியோ விழாவுக்கு அடிக்கப்பட்ட 10 ஆயிரம் போலி டிக்கட்டுகள்...அடிதடி,குழப்பம்...வீடியோ...

நேற்று ஆடியோ வெளியீட்டு விழா நடந்த சாய்ராம் கல்லூரியில் நிகழ்ச்சி நடத்தப்பட்ட வளாகத்தின் கொள்ளலவு 8000 பேர் மட்டுமே. ஆனால் திரண்டிருந்த ஜனத்திரளோ சுமார் 30 ஆயிரத்துக்கும் மேல் என்று சொல்லப்படுகிறது. காரணம் பிளாக்கில் பிரிண்ட் செய்யப்பட்டு விற்கப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிக்கட்டுகள்.விழாவுக்குச் செல்லும் வழியெங்கும் கூட்டம் நிரம்பிவழிந்தது. நிகழ்ச்சி துவங்கிய  சிறிது நேரத்தில் கார்  நிறுத்துமிடம் நிரம்பிவிட்டதெனச் சொல்லி வெளிக்கதவைப் பூட்டிவிட்டனர். 
 
bigil audio function confusions
Author
Chennai, First Published Sep 20, 2019, 11:39 AM IST

நேற்று சாய்ராம் கல்லூரியில் நடந்த ‘பிகில்’பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடந்த குளறுபடிகள் குறித்து விஜயின் வெறித்தனமான ரசிகர்களே கொந்தளிப்பான மனநிலையில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் #அய்யோ அம்மா ஆடியோ லான்ச்# என்கிற ஹேஸ்டேக்கை உருவாக்கி அதை ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள்.bigil audio function confusions

நேற்று ஆடியோ வெளியீட்டு விழா நடந்த சாய்ராம் கல்லூரியில் நிகழ்ச்சி நடத்தப்பட்ட வளாகத்தின் கொள்ளலவு 8000 பேர் மட்டுமே. ஆனால் திரண்டிருந்த ஜனத்திரளோ சுமார் 30 ஆயிரத்துக்கும் மேல் என்று சொல்லப்படுகிறது. காரணம் பிளாக்கில் பிரிண்ட் செய்யப்பட்டு விற்கப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிக்கட்டுகள்.விழாவுக்குச் செல்லும் வழியெங்கும் கூட்டம் நிரம்பிவழிந்தது. நிகழ்ச்சி துவங்கிய  சிறிது நேரத்தில் கார்  நிறுத்துமிடம் நிரம்பிவிட்டதெனச் சொல்லி வெளிக்கதவைப் பூட்டிவிட்டனர். 

இதனால், படத்தில் பணியாற்றியவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோர் வந்த கார்கள்  சாலையிலேயே நின்று கொண்டிருந்தன.அதற்குள் உட்காந்துகொண்டு உள்ளே இருப்பவர்களை கைபேசியில் அழைத்துக் கொண்டிருந்தனர். படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தின் வண்டியையே உள்ளேவிடாமல் தடுத்ததுதான் உச்சம்.bigil audio function confusions

கிரீன்பாஸ் எனும் முதல்தர நுழைவு அனுமதி வைத்திருந்த நூற்றுக்கணக்கானோர் உள்ளே போக முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். பிகில் படத்தின் படத்தொகுப்பாளர் ரூபன் ஒரு கிலோமீட்டர் நடநது போய்க்கொண்டிருந்தார். நீண்ட தூரப்பயணம், கடும் முயற்சி மற்றும் பொருட்செலவில் வாங்கிய நுழைவுச்சீட்டு கையில் இருந்தும் விழா அரங்குக்குள் நுழையமுடியாத கோபத்தில் நூற்றுக்கணக்கானோர் ஏற்பாட்டாளர்களுக்குச் சாபம் விட்டுக் கொண்டிருந்தனர்.விழா நிகழ்ச்சிகள் சன் தொலைக்காட்சியில் பிரத்யேகமாக ஒளிபரப்பப் பட விருக்கிறது. இதனால், ஆர்வம் காரணமாக சில ரசிகர்கள் தெளிவற்ற முறையில் எடுத்து வெளியிட்ட அரைநிமிட கால் நிமிட காணொலிகளையும் சமூக வலைதளங்களிலிருந்து நீக்கியிருக்கிறார்கள்.

இந்நிலையில் இன்று காலைமுதலே நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்ட விஜய் ரசிகர்கள் #அய்யோ அம்மா ஆடியோ லான்ச்# என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள். உடம்பெல்லாம் விஜயின் பச்சை குத்திய ஒரு ரசிகர் கூட நடிகர் விஜயை பச்சை பச்சையாகத் திட்டும் வீடியோ ஒன்றும் அந்த ஹேஸ்டேக்கில் வைரலாகி வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios