விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீசுக்காக விஜய் ரசிகர்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர்.  

விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீசுக்காக விஜய் ரசிகர்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில், விஜயின் பிகில் படத்தோடு, இயக்குனர் துறை செந்தில் குமார், இயக்கத்தில் உருவாகி வரும், தனுஷின் 'பட்டாஸ்' படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் விஜய் ரசிகர்களுக்கு மட்டும் இன்றி, தனுஷ் ரசிகர்களுக்கும் இந்த தீபாவளி இரட்டை தீபாவளியாக அமைந்துள்ளது.

இரட்டை வேடத்தில் தனுஷ் நடிக்கும் இந்த படத்தில், மெஹ்ரீன் பிர்ஸாடா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் நடிகை சினேகா அப்பா தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

விவேக் - மெர்வின் இசையில், உருவாகும் இப்படத்தை, டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரிக்கிறார்கள். மேலும் ஜி.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இணைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.