தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடித்து கலக்கிய திரைப்படம் "பிகில்". தீபாவளியை முன்னிட்டு ரிலீசான "பிகில்" திரைப்படம் வசூல் ரீதியாக ஏராளமான சாதனைகளை படைத்து வருகிறது. மேலும் "பிகில்" படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய தளபதி விஜய், "தேவையில்லாத விஷயங்களை விட்டு விட்டு, சமூகத்திற்கு பயனுள்ள நல்ல விஷயங்களை டுவிட்டரில் ட்ரெண்ட் செய்யுங்கள்" என தனது ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்தார். அதனையடுத்து சுபஸ்ரீ விவகாரம், பாலியல் வன்கொடுமை என பல்வேறு விஷயங்களை கையில் எடுத்த தளபதி ரசிகர்கள் புதுப்புது ஹேஷ்டேக்குகளை உருவாக்கி ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தளபதியின் அதிரடி பேச்சால் கவரப்பட்டு, இப்போது டுவிட்டர் புரட்சியில் இறங்கியுள்ள மற்றொரு பிரபலம் நம்ம வர்ஷா போலம்மா. 

"பிகில்" படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் வீராங்கனைகளில் ஒருவராக நடித்திருந்தார் வர்ஷா போலம்மா. அப்படத்திற்கு பிறகு சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவ்வாக இருக்கும் வர்ஷா, சமூக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் தெலங்கானாவிலும், தமிழகத்திலும் அடுத்தடுத்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அனைவரையும் கொதிப்படையச் செய்துள்ளது. 

வர்ஷா பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு எதிராக தனது டுவிட்டர் பக்கத்தில் குரல் கொடுத்துள்ளார். அதில் "பெப்பர் ஸ்பிரே ஆன்லைனில் சுலபமாக கிடைக்க கூடியது, விலையும் மிகவும் குறைவு. அதை வாங்கி உங்களது சகோதரிகள், தோழிகளுக்கு பரிசாக கொடுங்கள். தளபதி விஜய் அண்ணா சொன்னா மாதிரி நல்ல விஷயங்களுக்கு ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்ட் செய்தால், சமூகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார். மேலும் #GiftYourSisterAPepperSpray என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.